வங்கக்கடலில் புயல்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனஎச்சரிக்கை!

வங்கக் கடலில் புதிய புயல் தோன்றி உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மே 24ஆம் தேதி புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

இந்த புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதாலும் கடல் அலைகள் சீற்றத்துடன் இருக்கும் என்பதாலும் நாளை மறுநாள் முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது