உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை: கரு நாகராஜன்

நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த ஏகே ராஜன் தலைமையிலான குழு குறித்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது

இதனையடுத்து இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப் போவதில்லை என இந்த வழக்கை தொடர்ந்த பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் கூறியுள்ளார்

இந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளதால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

கரு நாகராஜன், பாஜக, நீட் தேர்வு,