12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் தேர்வுகள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் திருப்தி இல்லாதவர்களுக்கு ஆகஸ்டு 6 முதல் 19ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் அதே தேதியில் தனித்தேர்வு தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வுத்துறையின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.