ரேடியோவில் பள்ளி பாடங்கள்: 200 ஆசிரியர்கள், 50,000 மாணவர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

ஆனால் மொபைல் போன் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இல்லாததால் கிராம பகுதியில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சென்று சேர்வதில்லை

இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 200 ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ரேடியோவில் பாடம் நடத்தி வருகின்றனர் இதனால் 50,000 கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்று வருவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இதே முறையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது ஆயிரக்கணக்கில் செலவு செய்து மொபைல் போன் வாங்க முடியாதவர்கள் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் நூறு ரூபாய்க்கு ரேடியோ வாங்கி மிகச்சிறப்பாக பாடங்களை கவனிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது