சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவக்கம்

Veeranam lake_1

ஏரியின் பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த ஐந்து மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.

கீழணை மூலம் வடவாறு வழியாக 1150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வீராணம் ஏரியின் நீர் மட்டம் 41.05 அடியாக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த ஐந்தரை மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 10 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.