டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களின் முயற்சி ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
இந்த நிலையில்தான், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றுபோட்டி நடைபெற்றது.
மொத்தம் 6 வாய்ப்புகள் கொண்ட இறுதிச்சுற்றின் முதல் வாய்ப்பின் முடிவிலேயே நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை நெருங்கியிருந்தார்.
2 வது வாய்ப்பில் 87 புள்ளி 58 மீட்டர் தூரத்திற்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து தங்கப்பதக்க வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தினார்.
இறுதியில், நீரஜ் சோப்ராவின் இலக்கை மற்ற வீரர்கள் கடக்க முடியாததால், அவர் தங்கப்பதக்கதை வென்று புதிய வரலாறு படைத்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ள நீரஜ் சோப்ரா, தடகளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்ற சாதனையை படைத்துள்ளார்.