அமெரிக்க வீரர் வெளியேறும் வரை புதிய அரசு அமையாது – தாலிபான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் வரை புதிய அரசு அமையாது என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்

ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர் என்பதும் அந்நாட்டின் அதிபர் திடீரென தலைமறைவாகி விட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையில் புதிய அரசு அமைந்து இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையில் உள்ள வீரர்கள் வெளியேறும் வரை புதிய அரசு அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் வரை புதிய அரசு அமையாது என தாலிபான்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது