சமீபத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக வீரர் மாரியப்பன் உள்பட 54 இந்திய வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
பாரா ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழக வீரர் மாரியப்பன் சற்றுமுன் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற பெருமை மிகு தருணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
தமிழருடன் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்தியா அதிக அளவு பதக்கங்கள் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த போட்டி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது