தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நான்கு நாட்களுக்கு மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்றும் இந்த மழை மேலும் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்துள்ளது.
சென்னையிலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.