கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி மிகப்பெரிய வெற்றிபெற்றது.
ஆனால் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு ஆறு மாதங்களில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஆனால் பாஜக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.