டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி

indian-team

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் பிசிசிஐ போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதாக அறிவித்தது. அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

தொடர் நெருங்கி வரும் நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகள் அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உச்சம் பெற்றுள்ளது. 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதன் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என பேசப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவின் டி20 உலகக்கோப்பைக்கான அணித் தேர்வு முடிந்து விட்டதாகவும், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அதனை விரைவில் அறிவிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விராட் கோலி தலைமையில் 18 முதல் 20 வீரர்கள் அடங்கிய அணியாக அது இரு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஐபிஎல் ஆட்டங்களில் ஜொலித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டராக அசத்தி வரும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

இடது கை வேகப்பந்து வீச்சாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அல்லது இளம் வீரர் சேட்டன் சக்காரியாவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்லில் இருந்தும் விலகியுள்ளதால் அவருக்கு உலகக்கோப்பை கனவு கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச போட்டிகளில் சறுக்கலைச் சந்தித்துள்ள சஞ்சு சாம்சன் இடம் பெறுவதும் சந்தேகமே.

மெக்சிகோவில் நிலநடுக்கம்

indian-team-2
indian-team-2

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றும் வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தொடர் முடிவதற்குள் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

ஆங்கிலத்தில் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள : https://www.chennaitodaynews.com/