நீட் தேர்வு எழுத வந்த மாணவர் இடம் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் திருப்பத்தூர் கலெக்டர் அவரை காரில் அழைத்துச் மையத்திற்கு அழைத்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்ற மாணவர் ஏலகிரி உள்ள கல்லூரி ஒன்றில் நீட் தேர்வு எழுத வேண்டும்
அவருக்கு எப்படி நீட் தேர்வு மையத்திற்கு செல்வது என்று தவித்துக் கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக வந்த திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா என்பவர் மாணவரிடம் விசாரித்து அவருடைய நிலைமையை புரிந்துகொண்டு உடனடியாக அவரை தன்னுடைய காரில் அழைத்துச்சென்று நீட் தேர்வு மையத்தில் விட்டார்
சரியான நேரத்தில் அந்த மாணவர் மையத்திற்கு சென்றதால் அவர் நீட் தேர்வு எழுதினார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது