உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு 3வது இடம்?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் 3வது இடத்தை பெற்றுள்ளது.

9 மாவட்ட ஊராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட 169 பெயர்களில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கமல், சீமான், தினகரன், விஜயகாந்த் கட்சிகளை விடவும், காங்கிரஸ், பாமக, கட்சிகளை விடவும் அதிக வேட்பாளர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.