எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை நடந்தது.

இந்த நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பி உள்ளது

கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்னர்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆஜராக வேண்டும் என அனுப்பியுள்ளனர்.