டீசல் விலை ரூ.100 ஆனது: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 103.31 என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் விலை இன்று மிக அதிகமாக 34 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் ரூ.99 26 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது