பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தற்போது பார்ப்போம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.22 ரூபாய் என்ற நிலையில் விற்பனையாகிறது. சென்னையில் இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.25 என்ற விலைக்கு விற்பனையாகிறது.
சென்னையில் முதல் முறையாக 100 ரூபாயை டீசல் விலை தாண்டி உள்ளது அனைத்து பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது