சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னையில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை அதிகமாக இருக்கும் என்றும் ஆனால் காற்று குறைவாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்