கமல்ஹாசனுக்கு பதில் யார்? பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் 15 முதல் ஒரு மாதம் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அல்லது சூர்யா தொகுத்து வழங்குவார் என்றும், அதேபோல் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.