தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் திடீரென பிஎஸ்என்எல் நோக்கி செல்வதாக ட்விட்டரில் ட்ரென்ட் ஒன்று உருவாகி உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய நிலையில் வோடபோன் நிறுவனமும் உயர்த்தியது. இந்த நிலையில் ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது
இதனால் இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நோக்கி வாடிக்கையாளர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ப்ரீபெய்டு உள்ளிட்ட அனைத்து சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் பிஎஸ்என்எல்-க்கு மாறுவோம் என நெட்டிசன்கள் டுவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.