தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
வரும் டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் டிரைலர் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ரூபாய் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.