38 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ்: உலக சுகாதார மையம் தகவல்

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது முப்பத்தி 38 நாடுகளுக்கும் அதிகமாக பரவி விட்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாகவும் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் ஆகியவை பரவி வருவதால் மீண்டும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.