தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பரவிவிட்ட நிலையில் மீண்டும் ஒரு சில நாடுகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டோ என்பவர் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக மிக வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதால் இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து நாட்டின் மார்க் ரூட்டோ அறிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகள், உணவகங்கள், பார்கள், அருங்காட்சியங்கள், திரையரங்குகள் மூடப்படும் என்றும் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் நெதர்லாந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.