2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ:
ஜனவரி 1: புத்தாண்டு தினம் – ஐஸ்வால், சென்னை, காங்டாக் மற்றும் ஷில்லாங் உள்ளிட்ட இடங்களில் வங்கிகள் செயல்படாது.
ஜனவரி 3: புத்தாண்டு கொண்டாட்டம்/லோசூங் – ஐஸ்வால் மற்றும் கேங்டாக் பகுதிகளில் விடுமுறை.
ஜனவரி 4: லோசூங் – கேங்டாக் பகுதியில் விடுமுறை
ஜனவரி 11: மிஷனரி தினம் -ஐஸ்வால் பகுதியில் விடுமுறை
ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் – கொல்கத்தா பகுதியில் விடுமுறை
ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல்- அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை
ஜனவரி 15: உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே
சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் – பெங்களூரு, சென்னை, காங்டாக் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட வங்கி கிளைகள் முழுவதிற்கும் விடுமுறை.
ஜனவரி 18: தை பூசம் -சென்னை அதாவது தமிழ்நாட்டில் விடுமுறை.
ஜனவரி 26: குடியரசு தினம் – இம்பால், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், போபால், புவனேஷ்வர், சண்டிகர் மற்றும் அகர்தலா தவிர நாடு முழுவதும் விடுமுறை.