ஜனவரி 26 முதல் பெட்ரோல் விலை ரூ.25 குறைவு: முதல்வர் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் திடீரென பெட்ரோல் விலை ரூபாய் 25 குறைக்க்கப்படுவதாக அறிவித்துள்ளார். ஆனால்

இந்த விலை குறைப்பு இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு விலை குறைப்பு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்பு குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோலுக்கான விலையை பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் செலுத்தவேண்டும் என்றும் அவர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூபாய் 25 குறைக்கப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.