தமிழகத்தில் மீண்டும் மழையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

ஜனவரி 26ஆம் தேதி கடலூர் மாவட்டம் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் அரியலூர், திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யும்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் நாட்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்