நயினார் நாகேந்திரன் மீது அதிமுக புகார்!

சென்னையில் நேற்று தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து பாஜக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியபோது, ‘சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒருவர்கூட அ.தி.மு.க.வில் இல்லை. அ.தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை எப்போதும் சட்டமன்றத்தில் பேசுவதில்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் அண்ணாமலை துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று கூறினார்.

நயினாரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.