சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல் இருந்தாலே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது என்பதை பார்த்துள்ளோம்
ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் இந்தியாவில் கடந்த 89 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத அதிசயம் நடந்து வருகிறது.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதற்கான காரணம் என கூறப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43என விற்பனையாகி வருகிறது