37 வயதில் டாக்டர் கனவை நனவாக்கிய தர்மபுரி பிரபு!

டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த தர்மபுரியை சேர்ந்த 37 வயது பிரபு என்பவருக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

தர்மபுரி அருகே உள்ள மஞ்சவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பிரபு என்பவர் அரசு பள்ளியில் படித்து தனியார் ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் மருத்துவராக வேண்டும் என்ற கனவை 37 வயதான பின்னரும் தொடர்ந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது அவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது

பிரபு பல் மருத்துவத்திற்கான படிப்பை தேர்வு செய்துள்ளதாகவும், திருச்செங்கோட்டில் உள்ள சுயநிதி கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.