முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: நீட் விவகாரம் குறித்து ஆலோசனை!

mk stalin 1200

நீட் விலக்கு விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடவுள்ளது.

தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்திலேயே இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த நிலையில் அந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட ஆலோசனை இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.