பெண்கள் என்ன உணர்கிறார்கள் என்பது இல்லை சமூக பிரச்சனை என்றும் சமூக பிரச்சனை என்றால் என்ன என்ற எண்ணம் புரியாமல் பலர் இருக்கின்றார்கள் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார் மற்றும் காவி பிரச்சனை குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சாதி, மதம், மொழி, இன பேதங்கள் இன்றி அனைவரும் சமம் என்ற கருத்திற்கு எதிராகத் தொடர்ந்து ஒரு தரப்பு இயங்கி வருகிறது. அவர்களின் சதிக்கு சில கல்வி நிறுவனங்களும் பலியாகி வருகின்றன.
மத நல்லிணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் பண்பாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கு ஒன்றுகூட வேண்டிய நேரமிது. பெண்கள் என்ன ஆடை உடுத்துகிறார்கள் என்பதில்லை இந்த சமூகத்தின் பிரச்சனை.