பெண் செய்தியாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த ரானா என்ற பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள வங்கி கணக்கை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர். அது மட்டுமின்றி அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளது.
காசியாபாத் என்ற பகுதியை சேர்ந்த விதாஸ் என்ற என்ஜிஓ அளித்த புகாரின் பெயரில் பெண் செய்தியாளர் ராணாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் என்.ஜி.ஓக்கள் அளித்த நன்கொடை நிதியை செய்தியாளர் ரானா தனது சொந்த கணக்கில் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது..