வினாத்தாள் கசிந்ததற்கு யார் காரணம்? கண்டுபிடித்தது பள்ளிக்கல்வித்துறை

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்றைய தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த விசாரணையில் இரண்டு தனியார் பள்ளிகள் தான் காரணம் என்றும் அந்த தனியார் பள்ளிகள் திருவண்ணாமலையை சேர்ந்தென கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

இதனை அடுத்து வினாத்தாள் கசிவு காரணமாக பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது