பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது என்பதை யாரும் நம்பக்கூடாது என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
அதிமுக, பாஜகவுக்கு காலாகாலத்திற்கும் அடிமைகள்தான் என்றும், அவர்கள் சொல்படிதான் நடப்பார்கள் என்றும் கோவையில் இயக்குநர் கரு.பழனியப்பன் தேர்தல் பரப்புரை செய்தார்.
பாஜகவினர்களே அதிமுகவுடன் கூட்டணி முறிவு தற்காலிகமானதுதான் என்றும் விரைவில் வர உள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது