தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிஐ

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

தஞ்சையை சேர்ந்த மாணவி லாவண்யாயை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்ட் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கலாம் என அனுமதி அளித்தது.

இந்த நிலையில் தற்போது தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்து விசாரணையையும் உடனே தொடங்கிவிட்டது.