கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒகேனக்கல் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று முதல் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது