டெண்டர் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மேல்முறையீடு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு குறித்து எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு, அறப்போர் இயக்கம் 2 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்கு புலன் விசாரணையை 10 வாரங்களில் முடிக்க ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.