மீண்டும் உயர்ந்தது சென்செக்ஸ்: 1000 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் நேற்றும் இன்றும் சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் காரணமாக கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்த இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று உயர்ந்து வருகிறது

சற்றுமுன் வரையிலான நிலவரப்படி மும்பை சென்செக்ஸ் 971 புள்ளிகள் உயர்ந்து 54400 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிவிடுகிறது

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 260 புள்ளிகள் உயர்ந்து 16276 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது