காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கும் தலைமையகம் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வருவதால் அமெரிக்கை நாராயணன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார் என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க இனி அவரை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் கே எஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
இதனையடுத்து அமெரிக்கை நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
என்னை நேரில் விளக்கம் கேட்காமல்
சமூக தளத்தில் விளக்கம் கேட்டு @INCTamilNadu
பிரச்சினையை, மக்கள் சமூக தளத்தில் விசாரிக்க வழிவகுத்த அழகிரியே!இதோ #Raflale @BJP4India வின் லஞ்ச லாவண்யத்தை #திக வை திட்டியதுதான்,
கட்சியை விட்டு விலக்கக் காரணமா?@KS_Alagiri யே#பதில்சொல்_பதுங்காதே https://t.co/R6ctc2lKgZ— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) March 12, 2022
விளக்கம் கேட்காமல், 30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், @INCIndia கொள்கைக்கு எதிராக பேசியது
என்ன @INCTamilNadu தலைவர் @KS_Alagiri
விளக்க வேண்டும்.
கடந்த 3 நாட்கள் நான் பேசியது அனைத்தும் #காங்கிரசைகாப்பாற்றுவோம் என்றே!#SaveCongress2SaveIndia— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) March 12, 2022