உக்ரைன் மருத்துவரை கொன்ற ரஷ்ய படையினர்: அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கபட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வந்த பெண்ணை ரஷ்ய படைகள் பீரங்கியால் தாக்கிக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

31 வயதாகும் வலேரியா என்ற பெண் மருத்துவர் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறாமல் அங்கிருக்கும் போரால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் பொது மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வந்தார்

இந்த நிலையில் தனது தாயாருக்கு மருந்து வாங்க சென்று கொண்டிருந்த போது அவரது கார் மீது ரஷ்ய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது