இருசக்கர வாகனங்களுக்கு திடீர் தடை: தமிழக அரசின் அதிர்ச்சி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தடை என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட லைசென்ஸ் லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் ஒருசில மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர் வாகனங்களில் வருவதாக தகவல் வந்தது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.

மேலும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.