ஏழைகள் குடியிருந்தாலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு

ஏழைகள் குடியிருந்தாலும் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பல்லடம் அருகே சின்ன கூட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்த நிலையில் ஏழை மக்கள் குடியிருப்பதால் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பு வாதம் செய்தபோது ஏழைகள் குடியிருக்கிறார்கள் என்ற காரணத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது