தனுஷ் நடித்து வரும் ’நானே வருவேன்’ படத்தின் நாயகியாக சுவிஸ் நாட்டு அழகி எல்லி அவ்ரம் என்பவர் நடிக்க உள்ளார்.
இந்த தகவலை நடிகை எல்லி அவ்ரம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் நிலையில் எல்லி அவ்ரம் ஒரு வேடத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால் நடித்த ’பாரிஸ் பாரிஸ்’ உள்பட ஒருசில படங்களில் நடிகை எல்லி அவ்ரம் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.