மேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள்சந்திரன் நீடிப்பதால் புது முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை சிலர் மட்டம் தட்டி பேசினாலும் அதனால் உணர்ச்சிவசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதங்கள் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
கடகம்
கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
சிம்மம்
சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
கன்னி: கணவன்,மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் ஒருவரையொருவர் குறை கூறிக்கொள்ள வேண்டாம். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த,பந்தங்கள்வீடு தேடி வருவார்கள். பிரார்த்தனை களை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கும்பம்
கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
மீனம்
மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.