அமெரிக்காவில் பிஏ.2 ஒமைக்ரான் வைரஸ்: வேகமாக பரவுவதால் அதிர்ச்சி

அமெரிக்காவில் பிஏ.2 என்ற ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவுவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது.

ஒமைக்ரானை விட இந்த பிஏ.2 ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ள என்றும், பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1 வைரசை விட 30 சதவீதம் அதிகமாக பரவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரே வாரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் என்றும், இது ஒரு வாரத்துக்கு முன்பாக இது 39 சதவீதமாக இருந்தது என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.