அனைத்து அமைச்சர்களும் இன்று ராஜினாமா: முதல்வர் அதிரடி உத்தரவு
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் உத்தரவின்படி ராஜினாமா செய்ய உள்ளனர்.
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகவும், புதிய அமைச்சர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சர்களாக பதவி ஏற்றபோது இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டும்தான் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா, அமைச்சர்கள், ராஜினாமா,