மாணவர்கள் பேட்டி அளித்தால்… பெரியார் பல்கலை எச்சரிக்கை
மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
பெரியார் பல்கலைகழகத்தில் பயிலும் மாணவ மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் பேட்டி கொடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருந்த குமார் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்ததை மாணவர்கள் இதுகுறித்து ஊடகங்களில் பேட்டியளித்து வருகின்றனர்.