மனிதர்களைப்போல அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் லாபாரட்டரியுடன் ரோபோக்களின் திறமை சார்ந்த போட்டியில் போட்டியிடும் ‘ஹுயுமானாய்டு ரோபோ அட்லஸ்’ கற்களின் மீது நடத்தல், மனிதர்களை போல பாலன்ஸ் செய்தல் போன்றவற்றை செய்யக்கூடியதாகும். இந்த ரோபோ மனிதர்களைப் போன்று நடக்கவும், அனைத்து பணிகளையும் செய்யும் விதத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட புரோகிராம் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறடி உயரமும், 150 கிலோ எடையுள்ள இந்த அட்லஸ் ரோபோ அலுமினியம் மற்றும் டைட்டானியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.