தென்காசியில் வெளுத்து வாங்கியது மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தென்காசியில் வெளுத்து வாங்கியது மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் சற்று முன்னர் தென்காசியில் மழை வெளுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பாவூர்சத்திரம் சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து உள்ளது
சுமார் ஒரு மணிநேரம் மழை பெய்ததால் தற்போது பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது