தஞ்சையில் ரூ.300 கோடி மோசடி: ஏலச்சீட்டு மோசடியால் பொதுமக்கள் அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் 40 ஆண்டுகாலமாக சித்ரா சிட்பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக இருந்த நிலையில், இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது.
இதில் சுமார் 300 கோடி வரை பணம் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து திருச்சி பொருளாதார குற்றவியல் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.