மின்வெட்டு ஏன் என்பதை கேட்க எனக்கு உரிமை உள்ளது: தோனி மனைவி டுவிட்

மின்வெட்டு ஏன் என்பதை கேட்க எனக்கு உரிமை உள்ளது: தோனி மனைவி டுவிட்

ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மின்வெட்டு இருப்பது ஏன் என்பதை கேட்க எனக்கு உரிமை இருக்கிறது என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் மனைவி டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்

இந்த நிலையில் வருமான வரித்துறைக்கு வரி கட்டும் ஒரு நபராக மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என கேட்டதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்றும் அதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் சாக்சி தோனி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது